உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நகத்தால் வெட்ட வேண்டியதை கோடரி வரை கொண்டு செல்லாதீர் – ஸ்ரீ சமந்தபத்ர தேரர் எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
83 பார்வைகள்

மக்களுக்கு நேரடியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சென்று தங்களது பிரச்சினைகளையும் துயரங்களையும் தெரிவிக்க முடியாத சூழ்நிலையே நாட்டில் காணப்படுகின்றது என்று ஸ்ரீ சமந்தபத்ர தேரர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

தற்போதைய ஜனாதிபதி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று மக்களை நோக்கிக் கையசைத்துவிட்டு மட்டுமே திரும்புகின்றார் என்றும், மக்களின் துயரங்களுக்குச் செவிசாய்க்கும் உண்மையான தலைமைத்துவம் நாட்டில் இல்லை என்றும் அவர் சாடினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கிராமங்களுக்குச் செல்லும்போது உண்பதற்குக்கூட உணவின்றி நாளொன்றுக்கு இருவேளை மட்டுமே உண்ணும் ஏழை மக்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு தமது அவலங்களை எடுத்துரைக்கின்றனர். மக்கள் தெரிவிக்கும் இத்தகைய நியாயமான அழுது புலம்பல்களைத் எங்களால் நிராகரிக்க முடியாது.

உண்மையில் நாட்டின் தலைவர்களே மக்களுக்குச் செவிமடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஆனால் அத்தகைய அணுகுமுறையை தற்போதைய ஆட்சியாளர்களிடம் காண முடியவில்லை.

இந்தியாவில் இருந்து வருகை தந்த சுவாமி ஒருவரை ஹெலிகளில் ஏற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வது சுற்றுலாத்துறையை மேம்படுத்தாது.

சுற்றுலாத் துறையை உயர்த்த முறையான திட்டங்கள் அவசியமே தவிர, வெளிநாட்டுச் சுவாமிமாரை அழைத்து வந்து அனுராதபுரத்தைக் காண்பிப்பது அல்ல.

உலக நாடுகள் மதிக்கும் வகையில் ஜனநாயகம், தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பேணி அரசு செயற்படத் தவறினால் நாடு பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.

சமகாலத்தில் ஞானசார தேரரின் விடுதலை விவகாரத்தில் அரசு அலட்சியமாகச் செயற்பட்டமையாலேயே அது தற்போது பெரும் போராட்டமாகவும் மோதலாகவும் உருவெடுத்துள்ளது.

மக்கள் தமது மன அழுத்தங்களையும் அதிருப்திகளையும் வெளிப்படுத்தும்போது அவற்றை அடக்குமுறையால் ஒடுக்க முனையாமல், ஆரம்பத்திலேயே தீர்க்க முற்பட வேண்டும். நகத்தால் வெட்டக்கூடிய ஒரு பிரச்சினையைக் கோடரியால் வெட்டும் நிலைக்குக் கொண்டுசெல்லக் கூடாது.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, பொருள்களின் கடுமையான விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

மக்களின் குரல்களைப் புறக்கணிக்காமல், அவர்களது துன்ப நிலைகளைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனத்துடனும் நெகிழ்வுத் தன்மையுடனும் செயற்பட முன்வர வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக…

69 0 0
இலங்கை செய்திகள்

பிக்குகள் துறவற ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த…

76 0 0
இலங்கை செய்திகள்

மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப்…

75 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

88 0 0