உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வேகமாகப் பரவும் மர்மத் தாவரம்; கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம், மண்வளத்தை மேம்படுத்தும் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடின்றிப் பரவினால் விவசாய நிலங்களையும் ஏனைய தாவரங்கள் வளரும் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளதாகத் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

குறித்த தாவரத்தின் சாதக, பாதகங்கள் தொடர்பில் ஆய்வு செய்து வழங்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இத்தாவரத்தின் சிறிய விதைகள் காற்று, நீர் மற்றும் விலங்குகள் ஊடாக இலகுவாகப் பரவக்கூடியவை.

குறிப்பாக, விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாத கைவிடப்பட்ட நிலங்களில் அடர்த்தியான புதர்களாக வளரக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது.

இதேவேளை, மண் அரிப்பைக் குறைத்தல், மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல் மற்றும் ஆழமான மண் அடுக்குகளிலிருந்து ஊட்டச்சத்துகளை மேல் மண்ணுக்குக் கொண்டுவருதல் போன்ற நன்மைகளும் இத்தாவரத்துக்கு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அதன் மண்வள மேம்பாட்டுப் பண்புகளை விவசாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், கட்டுப்பாடற்ற பரவலைத் தடுப்பதற்கும் முறையான மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என ஆராய்ச்சி நிலையம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் இரண்டாமிடம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.…

88 0 0
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை கைவிடுங்கள்.!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட உப்பளத் திட்டத்தினை கைவிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இது…

80 0 0
இலங்கை செய்திகள்

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொ**ல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்.!

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. கொக்குவில் இந்துக்…

83 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் சாதனை.!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை…

76 0 0