உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மோட்டார் குண்டு மற்றும் ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
90 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குளக்கரை சீரமைப்புப் பணியின்போது மோட்டார் குண்டு மீட்பு
கடந்த வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் சுமார் 1.45 மணியளவில், கஞ்சிகுடிச்சாறு பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாகத் திருக்கோவில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

பாழடைந்த கிணற்றிலிருந்து ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு
இதேவேளை, மற்றொரு சம்பவமாக, விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவொன்றின் அடிப்படையில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அங்குள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரகத் துப்பாக்கியின் பாகங்கள் இதன்போது வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்ன நோக்கத்திற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்தன என்பது குறித்து திருக்கோவில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்; விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு.!

அம்பாறை மாவட்டம் தீகவாபி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொடர்ச்சியான நடமாட்டத்தாலும் தாக்குதல்களாலும் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக…

95 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது.!

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், அப்பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை…

114 0 0
அம்பாறை செய்திகள்

தங்கச் சங்கிலிகள் திருட்டு; முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது.!

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை…

100 0 0
அம்பாறை செய்திகள்

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு; அவசர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

128 0 0