பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; ஒருவர் உ**யிரிழப்பு.!
கொத்மலை, கொட்டகேபிட்டிய பகுதியில் இருந்து கடதொர நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் 500 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியிலிருந்து கடதொர பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 54 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் கொட்டகபிட்டிய வடக்கு, கடதொர பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான 50 வயதுடைய பெண் ஒருவர், சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

