உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
83 பார்வைகள்

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்.” – இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அனோஜன் விவகாரத்தில் நாடு என்ற ரீதியில் வெற்றிபெற்றுள்ளோம். ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அனோஜன் விவகாரத்தில் வேதனையடைந்த நிலையில், அனைவரின் மனங்களுக்கும் சவூதி அரசு ஆறுதலளித்துள்ளது. சவூதி இராச்சியத்துக்கும் அந்த நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கும் அரசு சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனோஜனைப் பாதுகாப்பதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். சவூதிக்குச் சென்ற இலங்கையின் சட்டப் பிரதிநிதிகள் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தற்போது பேசப்படுகின்றது. இந்த விடயம் உணர்வுபூர்வமானது மற்றும் கொடுமையானது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படவில்லை. அகழ்வுப் பணிகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே போதுமான நிதி ஒதுக்கப்பட்டதுடன், முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளோம்.

மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த அறிக்கை தனிநபர் ஒருவரால் மாத்திரம் தயாரிக்கப்படவில்லை. நீதிபதிகளின் கண்காணிப்பில்தான் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பொறிமுறைக் கட்டமைப்பு பலவீனமடையும் சந்தர்ப்பத்தில்தான் சர்வதேச பொறிமுறையை நாட வேண்டும். ஆகவே, இந்த விடயத்தில் தேசியக் கட்டமைப்பு வலுவானதாகவே காணப்படுகின்றது. ஆகவே, தனிப்பட்ட நபரின் பெயர்களைக் குறிப்பிட்டுச் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது அது எதிர்காலச் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமையும்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.

ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும், உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையே.!

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.…

65 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 3 பேரை இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணை…

76 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை.!

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில்…

67 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

90 0 0