உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் சோதனை; பாதுகாப்பு பெட்டகம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
68 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரின் கல்கிஸையிலுள்ள வீட்டில், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (17) அதிகாலை வேளையில் விசேட சோதனையொன்றை மேற்கொண்டு அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் (Safe) ஒன்றை மீட்டெடுத்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கல்கிஸ்ஸ, டெம்ப்ளர்ஸ் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

ஆணைக்குழுவிடம் உள்ள கோப்பொன்று தொடர்பான விசாரணைகளின் அங்கமாகவே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் சஞ்சய சமரசிங்க என்பவர் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றி வருகிறார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸாரின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், சுமார் 4 மணிநேரம் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னரே வீட்டிலிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இருப்பினும், குறித்த பாதுகாப்பு பெட்டகத்தை திறப்பதற்கான கடவுச்சொல் தன்னிடம் இல்லை என வீட்டின் உரிமையாளரான சஞ்சய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலமொன்றை வழங்கிய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்.!

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு…

72 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள்; தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துக.!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத்…

87 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்; சுகாதார அமைச்சருக்கு பேரவை அவசர கடிதம்.!

இலங்கைச் சுகாதார சேவையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு காணுமாறு கோரி தமிழ்…

71 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்து; வவுனியாவில் போராட்டம்.!

“அநுர அரசே, மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்து”, “நிரந்தர அரசியல் தீர்வை வழங்கு”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “காணி உரிமைகளை உறுதிப்படுத்து” உள்ளிட்ட பல்வேறு…

84 0 0