உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் மிக விரைவில் கணிசமான காணிகள் விடுவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
43 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன என்றும், வெகு விரைவில் கணிசமான அளவிலான காணிகள் மீள விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காணி விடுவிப்பு என்பது எங்களது மாவட்டத்தில் மிக முக்கியமானதொரு பேசுபொருளாக இருந்து வருகின்றது. இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் படிப்படியாகத் தீர்வுகளைப் பெற்றுத் தந்து வருகின்றோம். அந்தவகையில், தற்போதைய அரசு ஆட்சியமைத்த பின்னர் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பலாலிப் பகுதி காணி விடுவிப்பு தொடர்பில் தீவிரமாகப் பேசப்பட்டு வருவதுடன், அதனை விரைவில் விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி விரைவில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது வருகையின் போது, எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான காணிகளை விடுவிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் இங்கு எவரையும் ஏமாற்றவில்லை. தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கின்றேன். ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஒருவேளை விடுவிக்க முடியாத அளவுக்குச் சில காணிகள் இருந்தால் (அவ்வாறு பெருவாரியாக இருக்காது என நம்புகின்றேன்), அந்தக் காணிகளுக்கு உரிய நட்டஈட்டை வழங்கி, அவற்றை அரசுடைமையாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் மக்களின் காணிகள் மீள விடுவிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்.!

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு…

72 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள்; தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துக.!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத்…

88 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்; சுகாதார அமைச்சருக்கு பேரவை அவசர கடிதம்.!

இலங்கைச் சுகாதார சேவையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு காணுமாறு கோரி தமிழ்…

71 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்து; வவுனியாவில் போராட்டம்.!

“அநுர அரசே, மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்து”, “நிரந்தர அரசியல் தீர்வை வழங்கு”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “காணி உரிமைகளை உறுதிப்படுத்து” உள்ளிட்ட பல்வேறு…

85 0 0