உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
59 பார்வைகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட முடியாத ஒன்று என்று அமைச்சர் கே.டி. லால் காந்த திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,
“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே தற்போதைய அரசு தீர்மானங்களை எடுத்து வருகின்றது. பாதயாத்திரையாக வந்த தேரர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. அவ்வாறு நிறைவேற்றினால், அது மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறும் செயலாகவே அமையும்.” – என்றார்.

மேலும், “சட்டம் என்பது நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் சமமானதாகும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், மக்களின் ஆணைக்கும் புறம்பாக அரசால் செயற்பட முடியாது” என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் கருவலகஸ்வெவ, மீ ஓயா பாலத்திற்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10…

64 0 0
இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் மின்சார விநியோகத் தடை.!

இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தைச் சீர் செய்வதற்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்…

48 0 0
இலங்கை செய்திகள்

யாருக்காகவும் சட்டம் வளைக்கப்பட மாட்டாது.!

நாட்டில் நபர்களின் தகுதி அல்லது பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில்…

49 0 0
இலங்கை செய்திகள்

வங்காலை பிரதேச வைத்தியசாலைக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி நேரடி விஜயம்.!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை [16] மன்னார் வங்காலை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள்…

75 0 0