உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
68 பார்வைகள்

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் கருவலகஸ்வெவ, மீ ஓயா பாலத்திற்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீ ஓயா பாலத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 10 பயணிகளும் சிகிச்சைக்காகப் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 27 பயணிகள் பயணித்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக சாரதியால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிலக்கரி இழப்பையும் டீசல் மானியத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடாது.!

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும், தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நிர்வாக இழப்பையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என்று…

74 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் தீர்மானம்.!

அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பிரதி சபாநாயகர்…

58 0 0
இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் மின்சார விநியோகத் தடை.!

இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தைச் சீர் செய்வதற்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாருக்காகவும் சட்டம் வளைக்கப்பட மாட்டாது.!

நாட்டில் நபர்களின் தகுதி அல்லது பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில்…

50 0 0