உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வங்காலை பிரதேச வைத்தியசாலைக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி நேரடி விஜயம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
73 பார்வைகள்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை [16] மன்னார் வங்காலை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது, வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, உள்ளகத் தேவைகள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ரூ. 300,000 பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வங்காலை பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துதல், நோயாளர்களுக்கான வசதிகளை அதிகரித்தல் மற்றும் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான தேவைகளை அடையாளம் காணுதல் ஆகிய விடயங்கள் இந்த விஜயத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் கிராமப்புற வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இவ்விஜயம் அமைந்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாருக்காகவும் சட்டம் வளைக்கப்பட மாட்டாது.!

நாட்டில் நபர்களின் தகுதி அல்லது பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது.!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட முடியாத ஒன்று…

55 0 0
இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0