உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐக்கிய மக்கள் சக்தி இனவாதக் கட்சி அல்ல! – நளின் பண்டார எம்.பி. தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
42 பார்வைகள்

    ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒருபோதும் இனவாதக் கட்சி அல்ல என்றும், நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

    எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில்,

    “ஐக்கிய மக்கள் சக்தி என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதக் கட்சி கிடையாது. சிறுபான்மை இனத்துக்கோ அல்லது பெரும்பான்மை இனத்துக்கோ இங்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படுவதில்லை. நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது முதன்மையான கொள்கையாகும்.

    சிறுபான்மையினத்தவர்கள் மத்தியிலும், பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியிலும் சில அடிப்படைவாதிகள் இருக்கலாம். அந்த அடிப்படைவாதிகளைப் பற்றியே லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டிருக்கக்கூடும்.

    ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்ட சம்பவத்தின் போது, புலம்பெயர் அமைப்புகளும் (டயஸ்போரா) சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் உள்ள சில அடிப்படைவாதிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். நான் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக அந்த இனங்களில் உள்ள சில அடிப்படைவாதிகளைப் பற்றியே குறிப்பிடுகின்றேன்.” – என்றார்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    விளம்பரம்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

    நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

    60 0 0
    இலங்கை செய்திகள்

    காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

    அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

    79 0 0
    இலங்கை செய்திகள்

    வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

    சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

    82 0 0
    இலங்கை செய்திகள்

    பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

    பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

    91 0 0