உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவாராம்.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
77 பார்வைகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பார் எனத் தாம் உறுதியாக நம்புகின்றார் என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றம் அத்தண்டனையை இரத்துச் செய்து நிவாரணம் அளித்துள்ளது. அதேபோன்று, அரசமைப்பின் மூலம் தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும். அந்தப் பொதுமன்னிப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.” – என்று தேரர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0