இன்று இடம்பெற்ற விபத்து.!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில், இன்று (16.10.2026) காலை சுமார் 6:30 மணியளவில் லொறி ஒன்றும் ஜீப் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஜீப் வண்டி தனக்கு முன்னால் பயணித்த கார் ஒன்றுக்கு வழிவிட முற்பட்டபோது, எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

