உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரர் விவகாரம்; ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டிய வழியையே அரசு பின்பற்றியுள்ளது.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
73 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) குழுவினர் கண்டி மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்தது நல்லெண்ணத்துடனும், நாட்டில் எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்திலுமே அன்றி, நிலைமையை மோசமாக்குவதற்காக அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வணக்கத்திற்குரிய ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அதிகாரிகளால் அவரது துறவற ஆடை (சீவரம்) களையப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டமையானது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே சிரேஷ்ட பௌத்த தேரர்கள் சிலர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவைச் சந்தித்தனர். எனினும், ‘சட்டம் அவ்வாறு இருக்கையில் என்னால் அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியாது’ என ஜனாதிபதி அந்தச் சந்திப்பில் கூறியிருந்தார்.

இதனால் அந்தத் தேரர்கள் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியினர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் வரை ஞானசார தேரருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவசர உத்தரவொன்றைப் பிறப்பிக்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினோம்.

அதன் பின்னரே, நீதி அமைச்சரும் இந்த நிறைவேற்று அதிகாரங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் பௌத்த தேரர்கள் ஜனாதிபதியைச் சந்தித்த ஆரம்பக் கட்டத்திலேயே, அங்கிருந்த சட்ட வல்லுநர்கள் இந்த அதிகாரங்களைச் சுட்டிக்காட்டியிருந்தால் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. எதுஎவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் அரசாங்கம் பின்னர் கவனஞ்செலுத்தியுள்ளது.

நமது நாடு 2300 ஆண்டுகள் பழமையான பௌத்த பாரம்பரியத்தைக் கொண்டது.

இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற ஐரோப்பியர்கள் கூட பௌத்த துறவி ஒருவரை இவ்வாறு நடத்தியதில்லை. 1815 ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின்போதும், 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பின்போதும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து ஏனைய மதங்களையும் மதிக்கும் சரத்துகள் சேர்க்கப்பட்டன.

உயர்நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்குக் கூட, புதிய சாட்சியங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான நடைமுறை ஒன்று உள்ளது. நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் தீவிரவாதம் குறித்து அவர் விடுத்த எச்சரிக்கைகள் உண்மையென நிரூபணமானமையே காரணமாகும்.

எனவே, தற்போதைய நீதிபதிகளுடன் கலந்துரையாடி அரசாங்கத்தினால் இவருக்கு நிவாரணம் வழங்க முடியும். மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போது நான் அரசாங்கத்தின் கொள்கையையே விமர்சித்தனே அன்றி, எந்தவொரு சிறுபான்மை இனத்தையோ அல்லது வேறு சமூகத்தையோ விமர்சிக்கவில்லை.

அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் நீதியை வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0