உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீனவர்கள் மற்றும் கடலோடிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
56 பார்வைகள்

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் நிலவும் காலநிலை நிலைமைகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் கசுன் பாஸ்குவல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும்.

இருப்பினும், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் கங்கசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பான தன்மையைப் பெறக்கூடும்.

மேலும், இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், காற்றின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை பலமடையக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.

இதன் காரணமாக, நிலவும் இந்தச் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் சமூகத்தினர் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0