உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

119 குடும்பத்தினர் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழைப்பு.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
75 பார்வைகள்

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

“1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் திகதி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. கிடைக்கும் வரை நாங்களும் இந்த இடமெல்லாம் தேடித் திரிகிறோம். ஒரு முடிவுமே இல்லாமல் முப்பத்தி ஆறு வருஷமாக என் புருஷனைக் காணவில்லை” எனத் துயரம் நிறைந்த குரலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

எமது அலுவலகத்திடம் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியல் உள்ளது. இரட்டைப் பதிவு போன்ற சரிபார்ப்புகளுக்குப் பின்னர் தற்போது எங்களிடம் 17,000 பேரின் தரவுகள் உள்ளன. இந்தப் 17,000 பேரில் இதுவரை ஏறக்குறைய 11,000 பேரிடம் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2 இலட்சம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், OMP தனது பணிகளை முன்னெடுக்கும் போது பிறப்புச் சான்றிதழ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளை மாத்திரமே சேகரிப்பதாகவும், பாதிக்கப்பட்டோரின் மூல ஆவணங்களை எவரும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வியாழன் மற்றும் வெள்ளி( இன்று) வரை நடைபெற்று வருவதுடன் பல்வேறு இடங்களில் இருந்தும் தமது உறவுகளை நாட்டில் ஏற்பட்ட கடந்த கால அசாதாரண காலகட்டத்தில் இழந்த உறவுகள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0