உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

90 பார்வைகள்

கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஆறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு மற்றும் நடைபாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் 15.10.2026 நடைபெற்றது.

கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் குறித்த அடிக்கல் நாட்டும நிகழ்வு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது

குறித்த நிகழ்வில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் மருங்கன் மோகன், வலய கல்வி பணிப்பாளர், பள்ளி முதல்வர் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கடத் தொழில் அமைச்சர் இராமலிங்கம்ங சந்திரசேகரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கல்வியின் நிலை மற்றும் சீர்திருத்தம்: கல்வி பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது. அதனால்தான் கல்வித் திட்டத்தை மேம்படுத்தி மாணவர்களைப் போட்டி நிறைந்த உலகத்தில் சுயாதீனமாக இயங்க வைக்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

கலாச்சாரம், வறுமை மற்றும் கல்வியறிவு குறைபாடுள்ள இடங்களில் கலாச்சாரம் மற்றும் சீரழிவுகள் ஏற்படுகிறது. மேலும், போதைப்பொருள் பழக்கம் மற்றும் மதுபான சாலைகளின் அதிகரிப்பு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி, பெண் பிள்ளைகள் நகர் பகுதிகளுக்கு வந்து கல்வி கற்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அவற்றைச் சீர்செய்யும் வகையில் பள்ளிகளை மேம்படுத்தி, ஆசிரியர்களுக்குப் போதுமான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இளைஞர்களின் மனநலம் மற்றும் தற்கொலைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக மாணவிகள் மத்தியில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதற்கு சமூக வலைதளங்களின் தவறான பயன்பாடும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது என மேலும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0