‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் 23 வயது இளம் யுவதி கைது!
களுத்துறை – புலத்சிங்கள பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே மேற்படி யுவதி ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார்.
கைதான யுவதி மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

