சமையலறையில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் உயி@ரிழப்பு!
கொழும்பு – சீதவாக்கைப் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சீதவாக்கைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 33 வயதுடைய பெண்ணே இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தனது வீட்டின் சமையலறையில் மின்சார அடுப்பைப் பயன்படுத்தி காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மேற்படி பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

