மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயி@ரிழப்பு!
காலி – கரந்தெனிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் நாகொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

