உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
64 பார்வைகள்

மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த உணவகத்தில் உணவு பொருட்களில் ஈக்கள் காணப்பட்டதுடன், உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு இடங்களிலும் சுகாதார குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேலும், சுகாதாரமற்ற குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டமை, உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களைச் சுகாதாரமான முறையில் பராமரிக்காமை மற்றும் கழிவு நீரை முறையற்ற வகையில் வெளியேற்றுதல் உள்ளிட்ட குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன், உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் உரிய தனிநபர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமையும் பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த உணவகத்துக்கு எதிராக இதற்கு முன்னரும் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உணவு கையாளும் நிறுவனங்கள் செயற்படுவதை தடுக்கும் நோக்கில், உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0