சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணம்.!
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபயணம் இன்று 15.10.2026 நடைபெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபம் வரை குறித்த நடைபயணம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர்.

