உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் வைத்தியசாலையில் குழந்தை நலப் பிரிவு, வைத்தியர்களுக்கான விடுதி அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
66 பார்வைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குழந்தை நலப் பிரிவு கட்டிடத்தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான அன்ரன் ஜெயக்கொடி, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சுமார் 1000 மில்லியன் ரூபாவுக்கான கட்டிட கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 600 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான 600 மில்லியன் ரூபாய் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) குழந்தை நலப் பிரிவுக்காக 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும், வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0