மனைவியை கொ**லை செய்த கணவன் கைது.!
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்யார்த்த மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (14) ஆம் திகதி பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணாவார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 49 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வீட்டில் இருந்தவேளை, அவருக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதன்போது, இரும்புத் தடியால் தாக்குதலுக்குள்ளாகி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

