உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரருக்கு இனவாதி என முத்திரை குத்த வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
82 பார்வைகள்

தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) கொள்கைகளைக் கொண்ட சில முக்கிய குழுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், அது தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தயாராக உள்ளதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (15.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் கமகே:
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது ஓய்வு காலத்தில் மனைவியின் பராமரிப்பு மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவை சிறையிலடைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவந்து சேவை செய்த ஒரு தலைவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ போலி நோயைக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் எனப் பொறுப்புள்ள ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை (Bypass Surgery) செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் உயிரோடு அரசாங்கம் விளையாடக் கூடாது. மருத்துவ அறிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துவது நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
அத்துடன், கலகொடஅத்தே ஞானசார தேரரை ‘இனவாதி’ என முத்திரை குத்த வேண்டாம்.

அவருக்கு இந்த தீவிரவாத ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கியதே பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் தான். சிறையில் இருக்கும் ஞானசார தேரர், நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த கவலையையே வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையுடைய குழுக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்போடு விளையாடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தூதுவனைக் கொல்வதற்குப் பதிலாக அவர் கொண்டு வரும் செய்தியைக் கவனியுங்கள். ஞானசார தேரருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கு முன், அவர் கூறுவதில் உள்ள உண்மையைக் கண்டறியுங்கள்.

எனவே, சட்டப்பூர்வமான வழிமுறைகளின் கீழ் ஜனாதிபதி அவர்கள் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0