உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்வித் திட்டமிடல், நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்தியா சென்ற இலங்கை கல்வி அதிகாரிகள்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
83 பார்வைகள்

கல்வித் திட்டமிடல், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 20 இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகள் பயிற்சித் திட்டமொன்றில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ளனர்.

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் குழுவில் மத்திய, மேல், ஊவா, சப்ரகமுவ, வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்தியாவின் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இப்பயிற்சித் திட்டம், ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர் ஒக்டோபர் 7ஆம் திகதி புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதில் இந்தியா – இலங்கை கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, திறன் மேம்பாடு, தொழில்திறன் விருத்தி, முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாச்சார உறவுகள் மற்றும் மக்கள் மட்டத்திலான தொடர்புகள், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் தொழில்சார் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதே நோக்கமாகும் என இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0