உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவில் நடைபெற்ற முதலாவது BIMSTEC கூட்டத்தில் இலங்கை பங்கேற்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
68 பார்வைகள்

இந்தியாவின் புதுடில்லியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது BIMSTEC உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பங்கேற்றார்.

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான BIMSTEC இன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

மாறிவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வங்காள விரிகுடா பிராந்தியத்தைப் பாதுகாப்பானதாகவும், அச்சுறுத்தல்களைத் தாங்கி மீண்டெழும் திறன் கொண்டதாகவும் மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிராந்திய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுப்பு நாடுகளின் பொதுவான உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கூட்டத்தை ஏற்பாடு செய்து, பொதுவான பாதுகாப்பு இலக்குகளை முன்னெடுப்பதற்காகப் பிராந்திய நாடுகளை ஒன்றிணைத்தமைக்காக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அமைச்சர் ஆனந்த விஜேபால நன்றி தெரிவித்தார்.

BIMSTEC அமைப்பில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0