உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த வாரம் முதல் திடீர் சுகாதார பரிசோதனைகள்; விதிகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
87 பார்வைகள்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருட்களின் பொதியிடல், பெயரிடல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வின் போது அனைத்து உணவுக் கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உணவு வியாபாரிகளுக்கான கட்டாய வழிகாட்டல்களாக உணவைக் கையாளும் போது பணியாளர்கள் அனைவரும் பொருத்தமான பொலித்தீன் கையுறைகளை அணிய வேண்டும், சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்கள் முன்னங்கி (Apron) மற்றும் தலைக்கவச வலை (Hair Net) அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், சமையலறை மற்றும் உணவு தயாரிக்கும் பிராந்தியங்களை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பேண வேண்டும், வியாபார நிலையங்களில் பணிபுரியும் அனைவரும் செல்லுபடியாகும் மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் முதல் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள அனைத்து உணவுக் கையாளும் நிலையங்களிலும் சுகாதாரப் பரிசோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட சுகாதார விதிகள் மீறப்படுவதோ அல்லது குறைபாடுகள் கண்டறியப்படுவதோ அவதானிக்கப்பட்டால், எந்தவிதச் சலுகையும் அல்லது மன்னிப்பும் வழங்கப்படாமல் உடனடியாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவது ஒவ்வொரு உணவு வியாபாரியின் முதற்தரப் பொறுப்பாகும் எனச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0