உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
99 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட ‘GFS Pride’ என்ற கப்பல், கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியுள்ளது.

இந்த கப்பலில் பயணம் செய்த 21 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் போருக்கு மத்தியில்,ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணிவெடியில் (Sea Mine) சிக்கியதில் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பல் ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது.

இந்தக் கப்பல் ஆபத்தான மற்றும் அனுமதியற்ற பாதையில் சென்றதாலேயே கண்ணி வெடியில் சிக்கியதாக ஈரான் புரட்சிகர காவற்படை (Iran’s Revolutionary Guards) தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான கப்பலில் உள்ள கொள்கலன்கள் கடலில் மிதந்து வருவதால், ஏனைய கப்பல்களுக்கும் கடல்வழிப் போக்குவரத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடும். இதனால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் உள்ளூர் கப்பல்களும் கடற்றொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

வணிகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0