உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குற்றங்கள் செய்திருந்தால் ராஜபக்ஷக்களுக்கு மரண தண்டனை அளித்தாலும் பரவாயில்லை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
86 பார்வைகள்

“ராஜபக்ஷ குடும்பத்தினரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் குற்றங்கள் செய்திருந்தால் சட்டத்தின்படி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் முறையான விசாரணைகளின்றி அரசியல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே அமைந்துள்ளன” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் மந்த நிலையில் உள்ள அதேவேளை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் மதத்துக்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுத்த போதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில், தற்போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு அவரது துறவற ஆடை களையப்பட்டமையானது மதத்தின் மீதான பற்றையும் சமூக மதிப்பீடுகளையும் சிதைக்கும் செயலாகும்.

அறிஞர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய மரியாதை இதன் மூலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, ஒழுக்கமற்ற சமூகம் உருவாக்கப்படுகின்றது. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அவசியமானதுடன், எதிர்காலத்தில் ஏனைய மதங்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தவறிழைத்தவர்கள் எவராக இருப்பினும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதில் ஆட்சேபனை இல்லை. விசாரணைகளின்றி முன்னெடுக்கப்படும் பழிவாங்கல் நடவடிக்கைகளையே நாம் எதிர்க்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0