உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த சாசனத்தை அவமதித்தால் 1956 ஐப் போன்ற புரட்சி வெடிக்கும்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
81 பார்வைகள்

இலங்கையில் பௌத்த சாசனத்துக்கு மதிப்பளிக்காமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால், 1956ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்றதொரு புரட்சி மகாசங்கத்தினரின் தலைமையில் மீண்டும் ஏற்படக்கூடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய சூழ்நிலையை அவதானித்தால், இச்சமூகத்தில் 1956ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்றதொரு புரட்சியே அடுத்து ஏற்படக்கூடும் எனக் கருதுகின்றேன். இந்த நாட்டில் பௌத்த சாசனத்தை வீழ்த்தி, அது குறித்து கவனம் செலுத்தாமல் நாட்டை நிர்வகிக்க முற்பட்டால் அதற்கு எதிராக மகாசங்கத்தினர் கிளர்ந்தெழுவார்கள்.

குறிப்பாக, மக்களின் மனங்களில் தேங்கியிருந்த வேதனைகளே ஞானசார தேரர் விவகாரத்தின் ஊடாகத் தற்போது வெளிப்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் பிக்குகளுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது நாட்டில் பௌத்த சாசனத்துக்கு எதிராக இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை.

சிங்கள மொழியும், பௌத்த தர்மமும், சிங்கள மக்களும் ஒன்றிணைந்த நிலையிலேயே இருந்தனர். அதனை ஒருபோதும் உடைக்க முடியவில்லை. எனவே, பௌத்த சாசனத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் போது, எவரும் எதிர்பாராத விதத்திலேயே அது தொடர்பான வேதனை வெளிப்படும்.

மீண்டும் மகாசங்கத்தினர் தலைமையில் 1956இல் ஏற்பட்டது போன்றதொரு புரட்சியே ஏற்படக்கூடும். அப்போது எவரும் இலகுவில் அதிகாரத்தைப் பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைப் பொறுப்பேற்றே செயற்பட வேண்டி ஏற்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0