‘SIR’ விவகாரம்: போராட்டத்தில் பங்கேற்குமா தவெக?
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையான SIR-க்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் இந்தியா கூட்டணி சார்பில் இன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தவெக தலைவர் விஜய் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இதனால், போராட்டத்தில் தவெகவின் பங்களிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, SIR நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட தமிழக அமைச்சர் ராஜ்மோகன், தனிநபருக்கு எதிரான போராட்டமாக இந்த விவகாரத்தைத் திசைதிருப்பக் கூடாது எனத் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களில் தவெக பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தரப்புகளுக்கு இடையிலும் கருத்து முரண்பாடுகள் எழுந்திருந்தன.
இந்தப் பின்னணியில், போராட்டத்தில் தவெக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், விஜய்யின் மௌனம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

