உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கில் புதிய கைத்தொழில் பேட்டைகளுக்கான காணிகளை அடையாளம் காணும் பணி ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
51 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் பணி மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றுப் புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்தபோது, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஆளுநர் எடுத்துரைத்தார். அதற்கமைய, அந்த மாவட்டங்களில் பொருத்தமான காணிகளை அடையாளம் காணும் செயன்முறை மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, அச்சுவேலி மற்றும் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைகளை மேலும் வலுப்படுத்துதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகே விளக்கமளித்தார்.

மேலும், முதலீட்டாளர்களைக் கவரும் வகையிலான திட்டங்களை முன்னெடுத்தல், தொடர்புடைய தரப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், கடன் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் கைத்தொழில் பேட்டையின் இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0