உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்படவில்லை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
101 பார்வைகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை சிறைச்சாலையினுள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலை விதிகளின்படி அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன,”அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எங்களுக்கு எந்தப் முறைப்பாடும் கிடைக்கவில்லை; அது குறித்து எங்களுக்குத் தெரியாது… சிறைச்சாலைத் திணைக்களத்தின் விதிமுறைகளின்படி அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை…” எனக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0