உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜன் விரைவில் நாடு திரும்ப வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
60 பார்வைகள்

சவுதி அரேபியாவில் பொறியியலாளர் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இந்தச் செய்தி அனோஜனின் குடும்பத்தினருக்கும், அவருக்காக அயராது பாடுபட்ட அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசுகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியையும் ஒற்றுமையையுமே இந்த வெற்றி பிரதிபலிக்கின்றது.

இந்த முன்னேற்றத்தை நாம் வரவேற்றாலும், எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை. தேவையான அனைத்துச் சட்ட நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்டு, அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்.

அனோஜனை இயன்றளவு விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவுதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் தனது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணையும் நாளே நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நாள்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0