உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உழைத்த அனைவருக்கும் நன்றி.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
77 பார்வைகள்

இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியலாளர் சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்துச் செய்ய அந்த நாட்டு அரசு எடுத்த தீர்மானம் குறித்துத் தனது பெரு மகிழ்ச்சியையும் நன்றியையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதற்காக உழைத்த அனைவருக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கல்முனையைச் சேர்ந்த பொறியியலாளர் அனோஜனின் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள செய்தி கேட்டு உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஓர் உயிரைக் காப்பாற்றும் இந்த முயற்சியில் எங்களாலும் முடிந்தளவு பங்களிப்பை வழங்க முடிந்தது எனது வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமாகவும் கௌரவமாகவும் கருதுகின்றேன்.

அனோஜனின் வாழ்வுரிமைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் பைசல் முஸ்தபா, உபுல் குமரப்பெரும உள்ளிட்ட சட்டக் குழுவினருக்கும், சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஓர் உயிரைக் காப்பாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்மானத்தை வழங்கிய சவுதி அரேபிய உயர்நீதிமன்றத்துக்கும், சவுதி மன்னர் மற்றும் சவுதி அரசுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0