பால் சேகரிக்கச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.!
பொகவந்தலாவையில் பள்ளத்தில் வீழ்ந்து பால் சேகரிப்பதற்காக சென்ற லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தில் லொறியின் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை பால் சேகரிப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

