மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது.!
நுவரெலியா அம்பேவல பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நேற்று முன்தினம் 12.10.2026 நுவரெலியா, அம்பேவல பட்டிபொல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை நுவரெலியா மாவட்ட வன அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட வேளையில் மாணிக்கக் கற்கள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வன பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.
நேற்று முன்தினம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள், உபகரணங்கள் அனைத்துடனும் நுவரெலியா நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

