உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
82 பார்வைகள்

சவுதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக விதேசம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

சமூக ஊடகக் கருத்துத் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஆரம்பத்தில் அனோஜன் சிவராசாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையிலேயே, கடந்த அக்டோபர் 13 ஆம் திகதி சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான தீவிர முன்னெடுப்புகளின் பிரதிபலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் நேரடி வழிகாட்டலின் கீழ் இராஜதந்திர மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் அனோஜனின் குடும்பத்தினரும் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்துப் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த வழக்கினை வெற்றிகரமாக நடத்துவதற்காகத் தேவையான அனைத்து சட்டச் செலவுகளையும் இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க தீர்மானித்திருந்ததுடன், குடும்பத்தினர் ஏற்கனவே செலவிட்டிருந்த சட்டக் கட்டணங்களையும் மீள வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் சவுதி அரேபிய சட்டத்தரணிகளுடன் இணைந்து உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவுதி அரேபிய அரசாங்கத்திற்கும், அந்நாட்டின் நீதித்துறை மற்றும் சட்ட நடைமுறைகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சவுதிக்கான இலங்கைத் தூதுவர், தூதரக அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், சட்டக் குழுவினர் மற்றும் இதற்கு பங்களித்த அனைவருக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0