உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் புற்றுநோய் : வெற்றிகரமாக நிறைவேறியது சத்திர சிகிச்சை

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
85 பார்வைகள்

14வது பாப்பரசரான லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

அவரது வலது நுரையீரலின் கீழ் பகுதியிலேயே புற்றுநோய் ஏற்பட்டிருந்த நிலையில் இவ்வாறு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதான அவருக்கு, இன்று ரோமிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் 90 நிமிடங்களுக்கு அதிக காலம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பிறகு அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா (lung adenocarcinoma) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என வத்திக்கான் தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சைக்குப் பிறகு பாப்பரசர் இயல்பு நிலைக்குத் திரும்பியதுடன், குறுகிய நேர கண்காணிப்புக்குப் பின்னர் தனது அறைக்குத் திரும்பினார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமையான பரிசோதனைகளின் போதே இந்த நுரையீரல் கட்டி முதன்முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பாப்பரசர் சுமார் ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வைத்தியசாலையின் வெளியே பெருந்திரளான மக்கள் பல மணி நேரம் அவருக்காக காத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0