உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜன் விவகாரம்; ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகர சபை உறுப்பினர் மகஜர் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
66 பார்வைகள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) அவர்களிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் விசேட மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவரை, யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் நேரில் சந்தித்துக் கலந்தரையாடியபோதே இம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, சவூதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் மரண தண்டனை அச்சுறுத்தல் குறித்துச் சர்வதேச இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பாகத் தானாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் முக்கிய அம்சங்களை மாநகரசபை உறுப்பினர் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அனோஜனின் உயிரைக் காப்பாற்ற யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத வலியுறுத்தல் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஊடக அறிக்கை பிரதி உள்ளிட்ட மகஜரையும் அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

மாநகரசபை உறுப்பினரின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா, இவ்விவகாரம் தொடர்பில் தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். அத்துடன், ஜப்பான் தூதரகம் ஊடாக இது குறித்து உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்ததுடன், தமிழ் இளைஞனொருவனின் உயிரைக் காக்க யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் முன்வந்துள்ள இத்தகைய மனிதாபிமான வலியுறுத்தலையும் பாராட்டி வரவேற்றார்.

அனோஜன் விவகாரத்தில் வெறுமனே ஊடக அறிக்கைகளுடன் நின்றுவிடாது, பல்வேறு சர்வதேச நாடுகளின் இலங்கைக்கான இராஜதந்திரிகளையும், தூதுவர்களையும் நேரில் சந்தித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி மனுக்களைக் கையளித்து வரும் மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ்வின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் பலரதும் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன.

இச் சந்திப்பின் போது மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் அவர்களுடன், யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் செல்வன் எஸ்.எம். சசான் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0