உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த பிக்குகளின் ஆடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க துரித நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
57 பார்வைகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குச் சிறைச்சாலை ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து, பௌத்த பிக்குகளுக்கான சிறைச்சாலைச் சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

மூன்று வருடங்களுக்கும் அதிகமான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பௌத்த பிக்குகள் விடயத்தில், தற்போதைய சிறைச்சாலைச் சட்ட விதிகள் மற்றும் பாரம்பரிய வழக்கங்களின் அடிப்படையிலேயே அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.

ஞானசார தேரர் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் சட்ட விதிகளில் அவசியமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் இந்த வாரத்துக்குள் உரிய திருத்தங்கள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் இத்தகைய அசௌகரியங்கள் மற்றும் சந்தேகங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளைப் பெற்று முறையான சட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0