உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2026 இல் அதிகரிப்பு : IMF தகவல்

இந்திய செய்திகள் 3 நாட்கள் முன்
84 பார்வைகள்

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை 7.0 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

அதேவேளையில், அதிக பொதுக் கடன் மற்றும் அதிகரித்து வரும் கடன் பெறுவதற்கான செலவுகள் ஆகியவை எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் நாடுகளின் திறனைக் கட்டுப்படுத்துவதால், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதிலும் நிதிசார் பாதுகாப்பு இருப்புகளை (financial buffers) மீண்டும் கட்டமைப்பதிலும் முக்கியப் பொருளாதாரங்கள் வளர்ந்து வரும் அழுத்தத்தைச் சந்திப்பது குறித்து அது கவலை தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிதி நிறுவனம் ஒன்று, இந்தியாவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மற்றும் உயர்ந்த மசகு எண்ணெய் விலைகள் உலகின் பெரும்பகுதியைப் பாதித்து வரும் சூழலிலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது ‘2026 ஒக்டோபர் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ அறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை உயர்த்தியுள்ளது.

பல நாடுகளின் பொருளாதாரங்கள் அதிக அளவிலான பொதுக் கடன் சுமையை எதிர்கொண்டு வருவதையும், அதேவேளையில் பல நாடுகளில் நிதிப் பற்றாக்குறை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விடக் கணிசமாக அதிகமாக இருப்பதையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) சுட்டிக்காட்டியது.

நிதி திரட்டுவதற்கான செலவுகள் அதிகரித்திருப்பது, அரசு நிதியின் நிலைத்தன்மை குறித்த கவலைகளை மேலும் அதிகரிப்பதாக அந்த அறிக்கை எச்சரித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி…

81 0 0
இந்திய செய்திகள்

மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என எச்சரித்தேன்! : திருமாவளவன் ஆதங்கம்!!

தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான…

86 0 0
இந்திய செய்திகள்

கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று(16) திறந்துவைக்கிறாா். கோவை காந்திபுரம்…

66 0 0
இந்திய செய்திகள்

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏயர் இந்தியா சர்வதேச விமானம், கடத்தல் முயற்சி குறித்த சந்தேகத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான…

73 0 0