உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நடத்துநரை தாக்கிய சாரதி பணியிடை நீக்கம்!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
83 பார்வைகள்

வவுனியா பேருந்து நிலையத்தில் பயணி தொடர்பான பிரச்சினையின்போது பேருந்து நடத்துநருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படும் சாரதி ஒருவர் மரு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து சிற்றூர்தி உரிமையாளர் நிறுவனம் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 03.10.2026 அன்று வவுனியா பேருந்து நிலையத்தில், பயணி தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து பேருந்து நடத்துநருடன் குறித்த சாரதி கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, 09.10.2026 முதல் மேலதிக அறிவித்தல் வரை குறித்த சாரதியைத் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் அவர் சாரதியாகவோ நடத்துநராகவோ எந்தவொரு பேருந்திலும் பணியாற்ற முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்,

பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துநர்களும் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பயணிகள் தொடர்பான பிரச்சினைகளை மோதல்களாக மாற்றாமல், உரிய முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் பொதுப் போக்குவரத்துச் சேவையின் ஒழுங்கையும் தரத்தையும் பாதிக்கக்கூடியவை என்பதால், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர் தமது கடமைகளைப் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், போக்குவரத்துச் சேவையில் ஒழுங்கீனங்கள் இடம்பெறும்போது அவற்றை உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவருவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேருந்துச் சேவைகள் தொடர்பான குறைபாடுகள், சாரதிகள் அல்லது நடத்துநர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் பொதுமக்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முறைப்பாட்டு வட்ஸ்அப் இலக்கமான 071 9090900 ஊடாகத் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0