பூநகரி பிரதேச செயலகத்தில் தெங்கு செய்கையை மேற்கொள்ளும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் ஒரு அங்கமாக பூநகரி பிரதேச செயலகத்தில் தென்னை செய்கையை மேற்கொள்ளும் ஆரம்ப நிகழ்வு நாச்சிக்குடா பகுதியில் இன்று நடைபெற்றது.
தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப்பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் பொது முகாமையாள. W.m.a.b.விஜயசிங்க கலந்து கொண்டு நடுகையை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் மு.ஆயகுலன், தென்னை பயிர்ச்செய்கை சபையின் உத்தியோகத்தர்,கிராமசேவகர் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதன்போது பயனாளிகள் நாற்பது பேருக்கான தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.


