உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 இற்கு முன் செலவு செய்ய வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
77 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொட்டகலை பிரதேச உறுப்பினர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிட்டு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் நேற்று (13) நடைபெற்ற மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,
2026 இல் எமது சபைக்குக் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரின் அபிவிருத்தித் திட்டத்துக்கும் இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அடுத்த மாதத்துக்குள் செலவிட்டு நிதி திரும்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எமது பிரதேச சபைக்கு உட்பட்ட, வாகனங்களை நிறுத்த வசதியான கொமர்ஷல் “வாவி” பகுதியில் தற்காலிகக் கடைகளை அமைத்து வாடகைக்கு விடுவதன் ஊடாக சபைக்கு மேலதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் வரி வீதமும் அதிகரிக்கவுள்ளது. எனவே, 2027 வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 4 இலட்சம் ரூபாய் வீதம் நிதியை ஒதுக்கித் தர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்திக்கு உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கொட்டகலை மற்றும் லிந்துலை மாவட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுவதில்லை எனவும், அங்கு பணிபுரிவோர் நோயாளர்களிடம் தரக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பதாகவும் உறுப்பினர்கள் புஷ்பா விஸ்வநாதன், எஸ். பத்மநாதன், எஸ். இராஜேந்திரன், திருமதி நேசமலர், ரசிக்கா ஆகியோர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக பலரின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்கு எழுத்து மூலம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது பிரதேச சபை உறுப்பினர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்து தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதேபோல், உறுப்பினர்களின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் காப்பற்றி சமூகத்துக்கு எதிராக செயற்படுவோர் மீது தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களை “கள்ளத்தோணி” என்று கூறிய தோட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இத்தகைய ஒற்றுமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது. எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், இழிவு படுத்தும் போதும் நாம் துணிந்து குரல் எழுப்புவோம்.

அத்தோடு, எமது சபைக்கு 102 மில்லியான் ரூபாய் நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ள அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0