உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபர் ஏ.ஜி.எம். ரிஸாத் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
35 பார்வைகள்

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தின் புதிய அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள ஏ.ஜி.எம். ரிஸாத் அவர்களுக்குக் கல்முனை மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் சார்பில் சிறப்பான கௌரவிப்பும் வரவேற்பும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், மைமூனா மகளிர் அரபு கலாபீடம் மற்றும் மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் நிர்வாக சபைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு புதிய அதிபரை அன்போடு வரவேற்றனர்.

பாடசாலையின் கல்வி, ஒழுக்கம் மற்றும் உட்கட்டமைப்பு நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அதிபர் ஏ.ஜி.எம். ரிஸாத் அவர்களின் சேவையைப் பாராட்டியும், அவரது எதிர்காலக் கல்விப் பணிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையிலும், நிர்வாக சபையினரால் அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டுச் சிறப்பு வரவேற்பளித்து கௌரவிக்கப்பட்டது.

இக் கௌரவிப்பு நிகழ்வில் மைமூனா மகளிர் அரபு கலாபீடத்தின் முக்கியஸ்தர்கள், மைமூனா சமூக சேவை அபிவிருத்தி அமையத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புதிய அதிபரின் தலைமையின் கீழ் கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டுமென நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0