நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!
ஏர்பஸ் வானூர்திகள் கொள்முதல் தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, இம்மாதம் 27ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் வானூர்தி கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று இவ்வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளாலும், சந்தேக நபரின் வழக்கறிஞர்களாலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் சமர்ப்பணங்களை நீதியரசர் கவனத்தில் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னரே, நாமல் ராஜபக்ஷவை வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

