உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் நிதியுதவி.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
55 பார்வைகள்

முள்ளியவளையில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மாணவி சிவவடிவேல் இந்துஜாவின் சிகிச்சை செலவுகளுக்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவி நேற்றையதினம் (12.10.2026) மாலை வழங்கி வைக்கப்பட்டது.

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் மாணவி சிவவடிவேல் இந்துஜா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை மற்றும் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படும் நிலையில் உள்ளார்.

இவரது மருத்துவச் சிகிச்சைக்காக 80 முதல் 90 இலட்சம் ரூபாய் வரை நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவியின் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டியுள்ள காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாடு, ஏனைய ஆலயங்களும் இவ்வாறான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஆலயங்களின் நிதியிலிருந்து இவ்வாறான அவசர மருத்துவத் தேவைகளுக்காக உதவிகளை வழங்குவதன் மூலம், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆதரவளிக்க முடியும் என்பதையும் இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.

மேலும், எதிர்காலத்தில் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புகள் குறைந்த பிள்ளைகளுக்கு உதவுதல், மருத்துவத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூகநலத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நெருக்கடியில் சிக்கியுள்ள மாணவிக்கு உதவிக்கரம் நீட்டி, சமூகநலப் பணியில் முன்மாதிரியாகச் செயற்பட்ட காட்டா விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் இம்முயற்சி பாராட்டுக்குரியது.

மாணவி இந்துஜாவின் சிகிச்சைக்குத் தேவையான பெருந்தொகை நிதியைத் திரட்டுவதற்கு ஏனைய ஆலயங்கள், சமூக அமைப்புகள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்களும் முன்வருவது அவசியமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0