உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.எம்.எவ்வுடன் இலங்கை மற்றுமொரு ஒப்பந்தமா? – இதுவரை முடிவில்லை என்கின்றார் ஜனாதிபதி அநுர.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
77 பார்வைகள்

தற்போதைய வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தில் இணைவதற்கான வாய்ப்பை இலங்கை நிராகரிக்கவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் அடைந்துள்ள பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலான புதிய ஒப்பந்தம் குறித்து அரசு ஆராய்ந்து வருகின்றது.

எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய புதிய வேலைத்திட்டத்தின் வடிவம் குறித்து நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த உயர்மட்டப் பொருளாதார அதிகாரிகள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் தொடர்ந்தால், 2025ஆம் ஆண்டில் 440 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2026ஆம் ஆண்டில் சுமார் 600 கோடி அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும்.

இத்தகைய வெளிப்புறப் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

தற்போதைய ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பின் வலிமை மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டே சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்காலத் தொடர்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

63 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0